இஸ்லாம் தோன்றியது முதல் இன்று வரை அதன் தூய கொள்கை களையும் வேத நெறிகளையும் தகர்க்க பல் வேறு சூழ்ச்சிகள் பல்வேறு கால கட்டங்களில் நடந்து வந்துள்ளன.
நபி பெருமானார் (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்திலும் அதற்குப் பின்னரும் அவர்களின் கொள்கைகளை எதிர்த்து அரசியல் ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் பல முயற்சிகளை பல் வேறு வடிவங்களில் மேற் கொண்டனர். அனைத்திலும் தோல்வியே கண்டனர்.
இருந்தும் இஸ்லாத்தை அழிக்க முடியவில்லையே, அது மிகவேக மாகப் பரவிக் கொண்டே செல்கிறதே என்ற ஆவேசம் தணியவே இல்லை.
இன்றும் கோடிக்கணக்கில் பணத்தை அள்ளி வீசி பல முனைத்தாக்குதல் களை தொடர்ந்த வண்ணமுள்ளனர்.
அல்குர்ஆனை அழிக்க பெரும் சதி!
முஸ்லிமகளை வழிநடத்தும் அருள்மறை அல்குர்ஆனை அழித்துவிட்டால் தீர்வு கிடைத்துவிடும் என்று பகற்கனவு கண்டு வருகின்றனர். அதற்காக,
‘ஷீஆயிஸம், காதியானியிஸம், சூபித்துவம், தரீக்காயிஸம்’ போன்ற பல இயக்கங்களை தோற்றுவித்தும் அது முடியாது போயிற்று.
பல இலட்சம் போலிக் குர்ஆன்கள்!
குர்ஆனில், யூதர்களின் கைவரிசைகளையும்;, அக்கிரமச் செயல்கைளயும் குறித்து வரும் வசனங்களை நீக்கிவிட்டு அவர்களுக்கு இசைவான வசனங்களை சேர்;த்து பல இலட்சம் பிரதிகளை அச்சடித்து ஆப்ரிக்க நாடுகளிலும், ஆசிய நாடுகளிலும், குறிப்பாக இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் வினியோகித்தனர்.கூலிப்படையினரின் சூழ்ச்சிகளில் அகப்பட்ட அப்பாவி மக்கள் பலியாகி செய்வறியாது திகைத்தனர்.
இந்தோனேசியாவில் ‘மேடான்’ என்ற நகரில் மட்டும் 25000 பிரதிகள் வினியோகிக்கப்பட்டன. இந்தத் தகவலை நேரிலே கண்டு நாம் கூறியதும், ‘பல நாடுகளில் விற்பனைக்காகவும், வினியோகத்திற்காகவும் வைத்திருந்த பிரதிகளை ‘ராபிதத்துல் ஆலமுல் இஸ்லாமியா’ என்ற உலக இஸ்லாமிய அமைப்பு அவற்றை வாங்கி தீ வைத்துக் கொளுத்தினர்;’.
அமெரிக்காவின் போலிக் குர்ஆன்
யூதர்களைத் தெடர்ந்து அமெரிக்காவின் சதிகள் தொடந்தன. இஸ்லாத்திற் கெதிராக பல்வேறு புத்தகங்களையும்,இணைய தளங்களையும் வெளியிட்டும் ஆத்திரம் அடங்கவில்லை. ஸல்மான் ருஷதி, தஸ்லீமா நஸ்ரீன் போன்ற போலி முஸ்லிம்களை வைத்துப் பல நூல்களையும் கதைகளையும் கற்பனையாக எழுதினர். எஃகு போன்ற உறுதிமிக்க கொள்கைப் பிடிப்புள்ள முஸ்லிம்களை எந்த வகையிலும் அவர்களால் அசைக்க முடியவில்லை.
நாடகம் தொடர்ந்தது! அவர்;களின் வேதங்களிலே விரும்பியவாறு எழுதி விளையாடியதுபோன்று குர்ஆனிலும் விளையாட மீண்டும் தொடங்கியுள்ளனர். பல யூத, கிறித்தவ அறிஞர்களின் ஆதரவோடும் ஆக்கங்களோடும் புதிய குர்ஆன் ஒன்றை அரங்கேற்றியுள்ளனர். இதோ ! படியுங்கள்.!
தலைப்பு : ‘ TruQuran ‘(உண்மைக் குர்ஆன்),
New American Quran (புதிய அமெரிக்கக் குர்ஆன், இந்த நூறறாண்டின் தலைசிறந்த குர்ஆன் என்ற விளம்பரங்களுடன் குவைத்தில் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு குர்அனை வெளியிட்டனர்.
ஆபத்தான விளைவை ஏற்படுத்தும் சூது நிறைந்த ஒரு புதிய குர்ஆனை அமெரிக்கர்கள் உருவாக்கி ‘தி ட்ரூ ஃபுர்கான்’ – உண்மையான குர்ஆன்- என்ற பெயரில் குவைத் பாடசாலைகளில் விநியோகம் செய்துள்ளனர். மேலும் ‘சாத்தானின் வசனங்கள்’ எனவும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.
இத்தகவலை ‘அல் புர்கான்’ வார இதழ் தெரிந்து அதை வெளியிட்டு இரு புத்தக வெளியீட்டாளர்களின் பெயர்களையும் அம்பலப்ப டுத்தியுள்ளது. இரு பெரும் நிறுவனங்களான’ஒமேகா-2001-ம்;,ஓய்ன் பதிப்பகமும்’ இணைந்து தான் இப்பெரும் கைங்கரியத்தை அரங்கேற்றியுள்ளது என்பதையும் வெளியிட்டுள்ளது.
அது மட்டுமல்ல ‘இது 21-வது நூற்றாண்டின் தலைசிறந்த குர்ஆன்’எனவும் முதல் பக்கத்திலேயே குறிப்பிட்டும் உள்ளனர்;.
366 பக்கங்களைக் கொண்ட இந்நூல் அரபி,ஆங்கிலம் ஆகிய இருமொழி களிலும் காணப்படுகிறது. இதனை குவைத் தனியார்; ஆங்கில பாடசாலை களில் வினியோகமும் செய்துள்ளனர்;.
இந்நூலில் 114 அத்தியாயங்க்குப் பதிலாக, 37 அத்தியாயங்களை தள்ளி விட்டு, 77 அத்தியாயங்களைத் தொகுத்துள்ளனர். அதில் அல்-பாத்திஹா அத்தியாத்தைத் தொடர்;ந்து அல்ஜனா, இஞ்சீல் என இருபுதிய அத்தியா யங்களையும் சேர்;த்துள்ளனர்.
அத்தியாயத்தின் காப்பு வாக்கியமான பிஸ்மில்லாஹ்வுக்குப் பதிலாக ஒவ்வொரு அத்தியாயத்தின் துவக்கத்திலும் முக்கடவுள் (வுசinவைல) கொள்கையைக் சித்தரிக்கும் ‘முக்கடவுள்களின் அருளால்’ என்ற நீண்ட வாக்கியத்தையும் குறிப்பிட்டுள்ளனர்;.
இந்த புதிய குர்ஆன் உலகின் எல்லா இஸ்லாமியர்களின் நம்பிக்கையைத் தகர்க்கும் வகையில் அவர்களின் உணர்வுளை சீண்டியுள்ளது.
அது மட்டுமல்ல, அதில்,
1. ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணப்பது கூடாது. (அதாவது பலதாரமணம் கூடாது)
2. விவாகரத்துக்கு அனுமதி கிடையாது.
3. நடைமுறையில் உள்ள சொத்துரிமை சட்டங்களை மாற்றி உயில் மூலம் விரும்பியவருக்கு சொத்துரிமை வழங்கலாம்.
4. இஸ்லாத்தில் ஜிஹாத்- மார்க்கப்போர் ‘ஹராம்’ தடைசெய்யப் பட்டுள்ளது.
மேலும், அல்லாஹ்வின் வல்லமையை விமர்சனமும் செய்து பல நச்சுக் கருத்துக்களையும் திணித்து ‘மூன்று டாலர் விலைதான்’ என மலிவு விலையிலும் வெளியிட்டுள்ளது.
அல்லாஹ்வின் பாதுகாப்பு
கோடிக்கணக்கில் செலவு செய்து எப்படிப்பட்ட சூழ்ச்சிகளை உலகளாவிய அளவில் செய்தாலும் அல்லாஹ்வின் அருள்மறை குர்ஆனை அணைத்துவிட முடியாது! அழித்துவிட முடியாது! ‘அதை நாம் பாதுகாத்தே தீருவோம்’ என்ற உத்தரவாதத்தை அதை அருளிய நாயனே நமக்குத் தந்துள்ளான்.
இதோ அந்த உத்தரவாதம்
உலகப்பொது மறையை வழங்கிய வல்ல நாயன் அல்லாஹ் கூறுவதைக் கேளுங்கள்.
إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ
நிச்சயமாக நாமே இந்த குர்ஆனை அருளினோம்! மேலும் நாமே இதை பாதுகாப்போம். (அல்ஹுஜர் 15:09)
يُرِيدُونَ لِيُطْفِؤُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَاللَّهُ مُتِمُّ نُورِهِ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ
நிச்சயமாக அல்லாஹ்வின் வேதத்தின் ஒளியை தங்களின் வாய்களால் ஊதிஅணைக்க நினைக்கின்றனர். மேலும் நிராகரிப்பவர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் அதை (அணைக்கவிடாமல்) பூரணமாக்கவே விரும்புகிறான். (அஸ்ஸஃப்- 61:08, அத்தவ்பா- 9:32)
குர்ஆனை கிழித்தெறிந்த பிரிட்டிஷ் பிரதமர்
குர்ஆனுடைய குடியிருப்பு மனித உள்ளங்கள் ஆகும் எழுதப்பட்ட நூலுக்குள் அல்ல. இதை நமது எதிரிகள் யாவரும் புரிந்து வைத்துள்ளனர்.
குர்ஆனிய சமுதாயமாகிய நாம் குர்ஆனை மனனம் செய்து அதை ஓதியும், ஆய்வு செய்தும் அதனடிப்படையில் வாழ்க்கையை அமைத்துக் கொள்பவர்கள் முஸ்லிம்கள்.
ஆகவே, குர்ஆனிய சமுதாயத்தை எந்த காரணத்தை முன்னிட்டும் எந்த சக்தியும் வெற்றி கொள்ள முடியாது .
குர்ஆன் பெரும்பான்மையான முஸ்லீம்களுடைய மனங்களில் வாழ்ந்த போது முழு உலகையும் தமது காலடியில் கொண்டு வந்த ரோமானியர்களால் கூட வெல்ல முடியாமல் திணறினார்கள் இறுதியில் ரோமானிய சாம்ராஜ்யத்தையும் சின்னஞ் சிறுக் கூட்டத்தினரிடம் தாரை வார்த்தார்கள். அதற்கடுத்த ஆங்கிலேயர் நாடு பிடிக்கும் ஏகாதிபத்திய வெறியில் ஈடுபட்டிருந்த போது பெரும்பாலான முஸ்லிம் நாடுகள் அவர்களுடைய பிடியில் சிக்கவில்லை.
அதனுடைய காரணத்தைக கண்டறிந்த அன்றைய பிரிட்டிஷ் பிரதமர் கிலாடுஸ்டோன் (Glad stone) பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் ஒரு கையில் குர்ஆனை ஏந்தியவாறு அதனுடைய சில பக்கங்களைக் கிழித்தவாறு கீழ்வருமாறு கர்ஜித்தான்.
குர்ஆனுடைய சில பக்கங்களைக் கிழித்து விடுவதால் மட்டும் முஸ்லிம்களை வெற்றி கொண்டு விட முடியும் என்று நான் கூற மாட்டேன். மாறாக முஸலீம்களுடைய உள்ளங்களில் மனனமாகி இருக்கும் குர்ஆனை மறக்கடிக்காதவரை அவர்களை வெற்றிக் கொள்ள முடியாது என்று கொக்கரித்தான்.
முஸலிம்களே!
குர்ஆனை மனனம் செய்யுங்கள் உள்ளத்தில் பதிய வையுங்கள், மனித வாழ்வின் ஒப்பற்ற நெறிகளை போதிக்கும் , குர்ஆன் நமது உள்ளத்தில் இருக்கும் வரை எவரும் நம்மை அழிக்கமுடியாது. மாட்டார்.
கிறித்தவ தேவாலயம் குர்ஆனை எரிக்க அறிவிப்பு
புனிதக் குர்ஆனை எரித்து இஸ்லாமியச் சகோதரர்களின் மனக் கடலைக் கொந்தளிக்கச் செய்து காயப் படுத்தும் அமெரிக்க மூர்க்கர்களின் அடங்கா வெறியையும் அவர்களின் குர்ஆன் எதிர்ப்பு அறிவிப்பையும் கண்டு உலகே கொதிந்து எழுந்தது. இதையறிந்த கிறித்தவ உலகம் ஆடிப்பேயிற்று.
ஒரு முட்டாள் பாதிரியாரின் அறிவிப்பால் உலக அமைதிக்கு மீண்டும் ஓர் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருக்கிறது.
சக மனிதனை பார்த்து புன்னகைப்பதும், மக்கள் நடமாடும் இடத்தில் கிடக்கும் தீங்கு விளைவிக்கும் ஆணி, இரும்பு போன்ற பொருள்களை நீக்குவதும் தர்மம் என போதிக்கும் இஸ்லாத்தை “சாத்தான் மதம்” என்று சொன்னதோடு மட்டுமன்றி, அமெரிக்க ப்ளோரிடா மாநிலத்தைச் சார்ந்த பாஸ்டர் டெர்ரி ஜோன்ஸ் இந்த ஆண்டு செப்டம்பர் பதினோராம் தேதி குர்ஆன் எரிப்பு தினமாக அறிவித்தார்.
இந்த அறிவிப்பினால் அமெரிக்கா மிகுந்த பயத்திற்கு உள்ளாகி உள்ளது. மேலும் இதுவரை அமெரிக்கா கடைபிடிக்க நினைக்கும் முஸ்லிம்கள் நல்லெண்ண நடவடிக்கைகள் அணித்தும் இந்த ஒரு நிகழ்ச்சியால் அடிபட்டு போகும் என்றும் உணர்ந்தனர். இதற்கு ஹிலாரி கிளிண்டன் உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆப்கானிலும் , ஈராக்கில் மீதும் இருக்கும் அமெரிக்க படையினர் பற்றி கவலை தெரிவித்து உள்ளார் அமெரிக்க பொறுப்பு கலோனல் .
வாடிகன் போப் ஆலயமும் இதை காட்டு மிராண்டி தனம் என்று அறிவித்து உள்ளதோடு இதை கைவிட கோரி உள்ளது. ஆனால் இதற்கான எல்லா ஏற்பாடுகளையும் நிறுத்தாமல் செய்வதாக அந்த தேவாலைய தகவல்கள் தெரிவித்தன.
இதற்கிடையே ஃபுளோரிடா தேவாலயத்தின் இந்த குரான் எரிப்பு நிகழ்ச்சிக்கு அமெரிக்காவிலுள்ள கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய குழுக்கள் பல கண்டனம் தெரிவித்தன. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ‘த நேஷனல் அசோசியேசன் ஆப் எவான்ஜெலிக்கல்ஸ் (NAE)’ என்ற கிறிஸ்தவ அமைப்பு> குரான் எரிப்பு நிகழ்ச்சியை ஃபுளோரிடா தேவாலயம் கைவிட வேண்டும் என்றும்> இது உலக அளவில் இரு பிரிவு மதத்தினருக்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்திவிடும் என்றும் எச்சரித்தது.
இந்த நிகழ்ச்சி நடந்தால் உலக முஸ்லிம்களின் கொந்தளிப்பும் மீண்டும் செப்டம்பர் பதினொன்று போன்ற தீவிரவாத சம்பவங் களுக்கும் காரணமாக அமைந்துவிடும்.
உலக அமைதியை குலைக்க நினைக்கும் இது போன்ற விசயங்களில் இருந்து உலகைகாக்க அமைதியும் மனிதர்களிடையே மனித நேயமும் சக மனிதனையும் அவன் உணர்வுகளை மதிக்கும் எண்ணங்களை உயர்த்திடவேண்டும் அனைவரும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்தனர்.
இருந்தும் செப்டம்பர் 11 ஆம் தேதி டென்மார்க்கில் குர்ஆன் எரிப்பு நிகழ்ச்சியும், காலணிகளால் மிதித்து அடித்து அதன் மீது செருப்புக்கால்களால் ஏறிநின்றும் அசிங்கங்களை வீசியும் தங்கள் எதிர்ப்பைக் காட்டியுள்ளனர்.அதோடு நின்று விடாமல் குர்ஆனை கிழித்து தீவைத்துக் கொளுத்தியும் குர்ஆன் வெறியை வெளிப்படுத்தினர்.
முஸ்லிம்களே! விழித்தெழுங்கள்!
இன்னுமா தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள் ? நமது இறையருள் வேதமாம் உலகப்பொதுமறை அல்குர்ஆனின் மாண்பினைப் புரியாது அதை துணியில் சுற்றி ஏதோ வீட்டு மாடத்திலும், கைக்கெட்டா விட்டத்திலும் தூக்கி வீசியதன் விளைவு தான் இன்று நமது எதிரிகள் நம் குர்ஆனோடு விளையாடத் துவங்கியுள்ளனர்.
முதலில்
குர்ஆனின் முக்கியத்துவத்தை இன்னும் நாம் புரிந்து கொள்ள வில்லை. புரிந்து கொண்டால் அதில் அல்லாஹ் விவரிக்கும் உலகத்தின் வரலாறு உலக அதிசயங்கள், அறிவியல் உண்மைகள், வாழ்கை நெறிகள்,சட்ட திட்டங்கள் போன்ற அனைத்தையும் அதில் காணலாம்.
இறைவன் கூறுவதைக் கேளுங்கள்!
1.
إِنْ هُوَ إِلاَّ ذِكْرَى لِلْعَالَمِينَ
إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ لِّلْعَالَمِينَ
إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ لِّلْعَالَمِينَ
نْ هُوَ إِلَّا ذِكْرٌ لِّلْعَالَمِينَ
அல்அன்ஆமில் 6:90, யூசுப் 12:104, ஸாத் 38:87, அத்தக்வீர் 81:27 -ல் 4 வசனங்கள்! நான்கு தடவைகள் ஓங்கி முழங்குகிறான்
1.இது உலகத்தார் அனைவருக்கும் ஒரு நல்லுபதேசமாகும் என்று மீண்டும் மீண்டும் கூறி, ‘ இது ஓர் உலகப் பொது மறை’ என்று அறிவிக்கிறான்.
2.
مَّافَرَّطْنَا فِي الكِتَابِ مِن شَيْءٍ }الأنعام
நாம் (இவ்) வேத நூலில் எப்பொருளையும் எடுத்துரைக்காது விட்டு வைக்கவில்லை.
(அல்அன்ஆம் 6:38) என்ற வசனத்தின் மூலம் ‘இது மனித சமுதாயத்திற்கு தேவையான அனைத்தையும் கூறும் அருள் மறை’ என்று கூறுகிறான். அது மட்டுமா ?
3.
وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَاناً لِّكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ
நாம் உங்களுக்கு ஒவ்வொரு விசயத்தையும் தெளிவாக விளக்கக் கூடிய இவ்வேதத்தை நாமே அருளினோம் (16:89) என்று கூறி ‘அனைத்தையும் தெளிவாகவும் விரிவாகவும் விளக்கும் வேத நூல்’ என்றும் உலகுக்கு உணர்த்துகிறான்.
அதில் என்னதான் இல்லை ? உலகமே அதிசயிக்கும் அனைத்தும அதில் உள்ளன.
குர்ஆனைப் படியுங்கள்! ஆய்வு செய்யுங்கள்.வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துங்கள்.
குர்ஆனைப்பின்பற்றும் காலமெல்லாம் முஸ்லிம்களை எவரும் எந்தக் காலத்திலும் அழிக்க முடியாது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக