முகப்பு

புதன், 12 மே, 2010


விண்டோஸ் இயங்குதளத்தை எப்போது நிறுவியுள்ளீர்கள், இயங்குதளத்தின் தகவல்களை ஒரு நொடிப்பொழுதில் தெரிந்து கொள்ள systeminfo என்ற கட்டளையை command prompt சாளரத்தில் கொடுக்க வேண்டும்.

ஆனால் systeminfo என்ற கட்டளை கணினியின் அனைத்து தகவல்களையும் காண்பிக்கும். இந்த systeminfo கட்டளையை தனிப்பயனாக்கு (customize) முறையில் மிகவும் எளிதாக நமக்கு தேவையானவற்றை மட்டும் எடுத்துக் கொள்ள முடியும்.

எடு. கா

1. உங்கள் விண்டோஸ் இயங்குதளம் எப்போது நிறுவியுள்ளீர்கள் என்ற தகவலைப் பெற.
systeminfo | find/i “install date”
2. உங்கள் கணினியின் நினைவகம் மற்றும் அதனை சார்ந்த விபரங்களை தெரிந்து கொள்ள
systeminfo | find/i “memory”
3. உங்கள் கணினியின் விபரங்களை தெரிந்து கொள்ள
systeminfo | find/i “os”