முகப்பு

சனி, 20 நவம்பர், 2010

அரபாத் பெருவெளியில் பத்து அறிவுரைகள்

பெருமானார்(ஸல்) அவர்கள் அரபாத் பெருவெளியில் உரை நிகழ்த்தினார்கள்:-

அதில் பத்து விசயங்களை தமது அன்புக் கட்டளைகளாக உலகின் முன் வைத்தார்கள்.


1.( மக்களே! ) நன்றாகக் கவனத்துடன் கேட்டுக் கொள்ளுங்கள். ஏனெனில், அடுத்தவருடம் இதே நாளில் இதே இடத்தில் உங்கள் மத்தியில் நான் இருப்பேனா வென்பது எனக்குத் தெரியாது.


இந்த நாளும், இந்த மாதமும், இந்த நகரமும் பரிசுத்தமானவை. அதுபோலவேஉங்களது உயிரும், உடைமையும்,கண்ணியமும் பரிசுத்தமானவையாகும்.
(இறுதிநாள்வரை அவை பரிசுத்தமாக இருக்க வேண்டும். யாரும் அவற்றில் தலையிடவோ, அபகரிக்கவோ கூடாது.)இறைவனின் சமூகத்திலே இவற்றிற்கெல்லாம்
நீங்கள் கணக்களிக்க வேண்டியதிருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

2.( மக்களே! ) ஒருவர் குற்றம் செய்தால் அக்குற்றத்தின் தண்டனை அவரது குடும்பமத்தினருக்கல்ல.,அவருக்

கே வழங்கப்படும். தந்தை தன்பிள்ளைக்கோ,பிள்ளை தன் தந்தைக்கோ அநியாம் செய்யவேண்டாம். தந்தையின்
குற்றத்திற்காக பிள்ளையையோ,பிள்ளையின் குற்றத்திற்காகத் தந்தையையோ தண்டிக்கப்பட மாட்டாது.


3.( மக்களே! ) அஞ்ஞான காலத்தில் (இஸ்லாத்திற்கு முன்பு ஏற்பட்ட)கொலைகளுக்கும், கொடுஞ்செயல் களுக்கும், பழிவாங்கும் உரிமை இன்று முதல்
ரத்து செய்யப்பட்டுவிட்டது. முதலாவது எனது குடும்பத்தைச்சார்ந்த ரபீஆ இப்னுல் ஹாரிதின் கொலைக்கு பழிவாங்குவதை நான் மனப்பூர்வமாக
நிறுத்திவிட்டேன்.(அறியாமைக்காலத்தில் நிலவிய பழிக்குப்பழியும் உயிர்போக்கும் மடமையும் இனி கூடாது.)


4.( மக்களே! ) வட்டி வாங்குதல் இனி உங்களுக்குத் தடுக்கப்படுகிறது.அஞ்ஞான காலத்தில் ஏற்பட்ட வட்டித் தொகையனைத்தும் இன்று முதல் ரத்து செய்யப் படுகின்றன. (கடன்பட்டவர்கள் முதலை மட்டும் திருப்பிக்கொடுத்துவிட்டால் போதுமானது.)முதலாவது எனது பெரிய தந்தையார் அப்பாஸ்இப்னு அப்துல் முத்தலிப் அவர்களுக்கு வரவேண்டிய வட்டித் தொகையனைத்தும் தள்ளுபடி செய்துவிட்டேன்…


5.மக்களே! பெண்கள் குறித்து அல்லாஹ்வை அஞ்சிக் கொகொள்ளுங்கள். உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமை உள்ளது போல், உங்கள் மீதும் உங்கள்
மனைவியர் மீது உரிமையுண்டு). அவர்கள் உங்கள் கைகளிலே ஒப்படைக்கப்பட்ட(அமானிதம்) அடைக்கலப் பொருள்களாவர். அல்லாஹ்வின் பெயரால் அவர்களை உங்கள்மனைவியராகப் பொறுப்பேற்றிருக்கிறீர்கள். அவர்களின் கடமை, நீங்கள்விரும்பாதவர்களை உங்கள் இல்லத்திற்குள் அனுமதிக்கலாகாது. மீறினால்
படுக்கையை விட்டு சிறிது காலம் விலக்கிவைக்கவோ, காயம் ஏற்படாதவாறு அடிக்கவோ செய்யுங்கள். (அதுபோல) உங்களது கடமை நீங்கள் அவர்களுக்கு
வேண்டிய உணவு,உடைகளை வழங்கி (அன்புடனும் கருணையுடனும் நடந்துகொள்ளுங்கள். இறைவனுக்குப் பயந்து அவர்களது) நன்மைகளைப் பேணி வாருங்கள்.


6.மக்களே! எனது வார்த்தைகளை கவனத்துடன் கேளுங்கள், கேட்டு நன்றாகப்புரிந்து கொள்ளுங்கள். எல்லா முஸ்லிம்களும் ஒருவருக்கொருவர் சகோதரரே
என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். ஒரே சகோதரத்து வத்தைச் சேர்ந்தவர்கள் நீங்கள! ஒருவருடைய பொருளை அவர் மனப்பூர்வமாகக் கொடுத்தாலன்றி, மற்றவர் எடுப்பது (ஹராம்) தடுக்கப்படுகிறது. அநியாயம் செய்வதிலிருந்து கவனத்துடன் விலகிக் கொள்ளுங்கள். உங்களிடம் இரு பெரும் பொக்கிஷங்களை விட்டுச் செல்கிறேன்… அவைகளை பின்பற்றும் வரையில் வழி தவறமாட்டீர்கள்.

முதலாவது எனது திருவேதமான திருக்குர்ஆன!
இரண்டாவது இறைவனது தூதரான எனது வாழ்கை நெறிகள் (ஸுன்னத்)!

7.மக்களே! எனக்குப்பிறகு எந்த ஒரு இறைதூதரும் (நபியும்) இல்லை. உங்களுக்குப்பின் எந்த ஒரு சமுதாயமும் வரப்போவதில்லை. தெரிந்து
கொள்ளுங்கள்! உங்களைப்படைத்துக் காக்கும் உங்கள் இறைவனையே வணங்குங்கள். உங்களுக்குக் கடமையாக்கப்பட்ட ஐவேளைத் தொழுகைகளை சரிவர நிறைவேற்றி வாருங்கள்.

ரமளான் (என்னும் புனித) மாதத்தில் நோன்பு நோற்று வாருங்கள். உங்கள் செல்வத்துக்குரிய ஸகாத்தை (கணக்கிட்டு) உங்ளைப் பரிசுத்தப் படுத்துவதற்காக வழங்கி வாருங்கள். உங்கள் இறைவனின் இல்லத்திற்குச் சென்று ஹஜ்ஜுக் கடமையையை நிறைவேற்றி வாருங்கள். உங்களை ஆளும் தலைவர்களுக்குக் கட்டுப்படுங்கள். இவற்றால் நீங்கள் உங்களுக்காகச்சித்தப்படுத்தப்பட்டுள்ள சுவனத்திற்குச் செல்வீர்கள்.

8.மக்களே! உங்கள் இறைவனை மிக விரைவில் நீங்கள் சந்திப்பீர்கள். அவன்உங்கள் செயல்கள் அனைத்தையும் பற்றி விசாரணை செய்வான். எனக்குப்பிறகு நீங்கள் உங்ளுக்கிடையே கொலைக் குற்றம் புரிந்து வழிகேடர் களாக மாறிவிடவேண்டாம். அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக சைத்தான் உங்களின் இந்தபூமியில் அவனை வணங்குவதைக் குறித்து (ஏமாற்ற மடைந்து) முற்றிலும் நிராசையடைந்து விட்டான். ஆயினும் நீங்கள் மிக இலேசாகக் கருதும் செயல்களில் அல்லாஹ்வுக்கு மாறு செய்யவைத்து சைத்தானுக்கு (உடன்பட்டு) தலை வணங்குவீர்கள். அதன் மூலம் அவன் மகிழ்சியடைவான். ( எந்தவகை யிலும் சைத்தானியச் செயல்களுக்கு இசைந்து விடாதீர்கள்)


9.மக்களே! அறிந்து கொள்ளுங்கள!. உங்கள் இறைவன் ஒருவனே! உங்கள் தந்தையும் ஒருவரே!இறையச்சம் கொண்டோரைத்தவிர, ‘அரபிகள் அஜமி (அரபியல் லாதார்) களை விடஉயர்ந்தோருமல்ல. அதுபோல் அஜமிகள் அரபிகளைவிட உயர்ந்தோருமல்ல. வெள்ளை நிறத்தவர் கறுப்பு நிறத்தவரை விடவோ, கறுப்பு நிறத்தவர் வெள்ளை நிறத்தை விடவோ சிறந்தோ ருமல்ல. அனைவரும் ஆதமுடைய மக்களே! அந்த ஆதம் மண்ணால் படைக்கப்பட்டவரே. (ஜாதித்திமிர், நிறத்திமிர்,குலத்திமிர் அனைத்தையும் இதோ எனது காலின் போட்டு மிதிக்கிறேன்.) சொற்பொழிவை முடித்த வள்ளல்பெருமானார்(ஸல்) வெள்
ளம்போல் திரண்டிருந்த கூட்டத்தினரை நோக்கிக்
கேட்டனர்.


10.( மக்களே! ) இறைவனது கட்டளைகளை நான் உங்களுக்கு அறிவித்து விட்டேனா? இறைவன் எனக்களித்த தூதை நிறை வேற்றிவிட்டேனா? என என்னைப்பற்றி உங்களிடம் விசாரிக்கும் போது), இறுதித் தீர்ப்பு நாளில் என்ன பதில் கூறுவீர்கள்?


‘நிச்சயமாக (இறைவனது கட்டளைகளை) எங்களுக்கு) அறிவித்துவிட்டீர்கள்! இறைவன் தங்களுக்கு வழங்கிய தூதுவத்தை (நபித்துவத்தை) முழுமையாகநிறைவேற்றி விட்டீர்கள்! எங்கள் வாழ்வுக்குத் தேவையான அனைத்து
அறிவுரைகளையும் வழங்கிவிட்டீர்கள். என்றும் சாட்சியம் கூறுவோம்.!’ அந்த மாபெரும் மனிதக் கடலிலிருந்து ஒருமுகமாக வான்முட்ட எழுந்தது இந்தப்
பேரொலி. இதைக்கேட்ட இறுதித்தூதர் (ஸல்) அவர்கள் வானத்தை நோக்கி தங்களதுதிருக்கரங்களை உயர்த்தி,

அல்லாஹும்மஷ்ஹது! அல்லாஹும்மஷ்ஹது!!
அல்லாஹும்மஷ்ஹது!!!


இறைவா!நீயேஇதற்கு சாட்சி! இறைவா! நீயே இதற்கு சாட்சி!இறைவா! நீயே இதற்கு சாட்சி! என்று மும்முறை முழங்கினார்கள். மேலும் இங்கு வந்திருப்பவர்கள், வராதவர்களுக்கும் என்னுடைய இந்தச்செய்திகளைத் தெரிவித்துவிடுங்கள்… ஏனெனில் நேரில் கேட்போரை விடகேள்விப்படுவோரில் சிலர் நன்கு விளக்க முடையோராக இருப்பர்.

(ஆதார நூற்கள்: புகாரி,முஸ்லிம், அபூதாவூது, திர்மிதி, முஸ்னது அஹ்மது, இப்னு ஜரீர்,இப்னுஹிஷாம்,

இறுதி நாளின் அடையாளங்கள்

1.மகளின் தயவில் தாய்

ஒரு பெண் தனது எஜமானியைப் பெற்றெடுத்தால் அது யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்றாகும் என்பது நபிமொழி.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 4777, 50

2.பின் தங்கியவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடைதல்

‘வறுமை நிலையில் (அரை) நிர்வாணத்துடனும் வெறும் காலுடனும் ஆடுகளைமேய்த்துக் கொண்டிருந்தவர்கள் மக்களின் தலைவர்களாக ஆவது, யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்று” என நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டனர்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 4777

ஒட்டகம் மேய்த்துத் திரிந்தவர்கள் மிக உயரமான கட்டடங்களைக் கட்டிவாழ்வார்கள் என்பதையும் யுக முடிவு நாளின் அடையாளமாக நபிகள் நாயகம் (ஸல்)குறிப்பிட்டார்கள்.

நூல்: புகாரி 50

3. குடிசைகள் கோபுரமாகும்

இன்று நடுத்தர வர்க்கத்தினர் கூட அடுக்கு மாடிகளில் வசிக்கின்றனர்.
இதையும் யுக முடிவு நாளின் அடையாளமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
குறிப்பிட்டார்கள்.

நூல் : புகாரி 7121

4.விபச்சாரமும், மதுப்பழக்கமும் பெருகும்

யுக முடிவு நாள் நெருங்கும் போது விபச்சாரமும், மதுவும் பெருகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டுள்ளனர்.

நூல் : புகாரி 80, 81, 5577, 6808, 5231

5.தகுதியற்றவர்களிடம் பொறுப்பு

‘நாணயம் பாழாக்கப்படும் போது அந்த நாளை எதிர் நோக்கு” என்று நபிகள் நாயகம் அவர்கள் கூறிய போது ‘எவ்வாறு பாழ்படுத்தப்படும்?” என்று ஒருவர் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘தகுதியற்றவர்களிடம் ஒரு காரியம் ஒப்படைக்கப்படும் போது அந்த நாளை எதிர் நோக்கு” என்று விடையளித்தார்கள்.

நூல் : புகாரி 59, 6496

6.பாலை வனம் சோலை வனமாகும்

செல்வம் பொங்கிப் பிரவாகித்து, அதற்கான ஸகாத்தைப் பெறுவதற்கு எவரும் கிடைக்காத நிலையும், அரபுப் பிரதேசம் நதிகளும், சோலைகளும் கொண்டதாக மாறும் நிலையும் ஏற்படாமல் அந்த நாள் ஏற்படாது

நூல் : முஸ்லிம் 1681

7.காலம் சுருங்குதல்

காலம் சுருங்கும் வரை அந்த நாள் ஏற்படாது. (இன்றைய) ஒரு வருடம் (அன்று) ஒரு வாரம் போலாகி விடும். (இன்றைய) ஒரு வாரம் (அன்று) ஒரு நாள் போலாகும்.
(இன்றைய) ஒரு நாள் (அன்று) ஒரு மணி நேரம் போல் ஆகும். ஒரு மணி என்பது ஒரு விநாடி போன்று ஆகும் என்பதும் நபிகள் நாயகம் அவர்கள் காட்டிய அடையாளம்.

நூல் : திர்மிதீ 2254)

8.கொலைகள் பெருகுதல்

கொலைகள் அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

நூல் : புகாரி 85, 1036, 6037, 7061

9.நில அதிர்வுகளும், பூகம்பங்களும் அதிகரித்தல்

பூகம்பங்கள் அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டுள்ளனர்.

நூல்: புகாரி 1036, 7121

10.பள்ளிவாசல்களை வைத்து பெருமையடிப்பது

மனிதர்கள் பள்ளிவாசல்களைக் காட்டி பெருமையடிப்பது யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்றாகும் என்பது நபிமொழி.

நூல்கள் : நஸயி 682, அபூதாவூத் 379, இப்னுமாஜா 731, அஹ்மத் 11931, 12016,
12079, 12925, 13509.

11.நெருக்கமான கடை வீதிகள்

கடைகள் பெருகி அருகருகே அமைவதும், நியாயத் தீர்ப்பு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

நூல்: அஹ்மத் 10306

12.பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தல்

பெண்களின் எண்ணிக்கை தாறுமாறாக அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

நூல்: புகாரி 81, 5231, 5577, 6808

13.ஆடை அணிந்தும் நிர்வாணம்

ஆடை அணிந்தும் நிர்வாணமாகத் தோற்றமளிக்கும் பெண்கள் இனி மேல் தோன்றுவார்கள் என்பதும் நபிமொழியாகும்.

நூல் : முஸ்லிம் 3971, 5098

14.உயிரற்ற பொருட்கள் பேசுவது

விலங்கினங்கள் மனிதனிடம் பேசும் வரையிலும் தோல் சாட்டையும் செருப்பு வாரும் மனிதனிடம் பேசும் வரையிலும் யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி.

நூல்: அஹ்மத் 11365

15.பேச்சைத் தொழிலாக்கி பொருள் திரட்டுதல்

தங்கள் நாவுகளை (மூல தனமாகக்) கொண்டு சாப்பிடக் கூடியவர் கள் தோன்றும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி.

நூல்: அஹ்மத் 1511

16.தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுதல்

தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுவது யுக முடிவு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

நூல்: ஹாகிம் 4/493

17.பள்ளிவாசலை பாதைகளாகப் பயன்படுத்துதல்

பள்ளிவாசல்கள் பாதைகளாக ஆக்கப்படுவதும் யுக முடிவு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

நூல்: ஹாகிம் 4/493

18.சாவதற்கு ஆசைப்படுதல்

இறந்தவர்களை அடக்கம் செய்த இடத்தைக் காணும் மனிதன் நானும் இவனைப் போல் செத்திருக்கக் கூடாதா என்று கூறாத வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி.

நூல்: புகாரி 7115, 7121

19.இறைத்தூதர் என வாதிடும் பொய்யர்கள்

ஏறத்தாழ முப்பது பொய்யர்கள் தம்மை இறைத்தூதர் என்று வாதிடும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி.

நூல்: புகாரி 3609, 7121

20.முந்தைய சமுதாயத்தைக் காப்பியடித்தல்

‘உங்களுக்கு முன் சென்றவர்களை ஜானுக்கு ஜான், முழத்துக்கு முழம் நீங்கள் பின்பற்றுவீர்கள். அவர்கள் உடும்புப் பொந்தில் நுழைந்தார்கள் என்றால் நீங்களும் நுழைவீர்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
‘அல்லாஹ்வின் தூதரே முன் சென்றவர்கள் என்று நீங்கள் குறிப்பிடுவது யூதர்களையும், கிறித்தவர்களையுமா?” என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘வேறு யாரை (நான் குறிப்பிடுகிறேன்)” என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 3456, 7319

21.யூதர்களுடன் மாபெரும் யுத்தம்

யூதர்களுடன் நீங்கள் போர் செய்யும் வரை யுக முடிவு நாள் வராது. அந்த யுத்தத்தின் போது ‘முஸ்லிமே இதோ எனக்குப் பின் னால் யூதன் ஒருவன் ஒளிந்திருக்கிறான்” என்று பாறைகள் கூறும்.

நூல்: புகாரி 2926

22.கஃபா ஆலயம் சேதப்படுத்தப்படுதல்

கஃபா ஆலயம் இறைவனால் பாதுகாக்கப்பட்ட ஆலயமாக இருந்தாலும் ‘கால்கள் சிறுத்த அபீஸீனியர்கள் அதைச் சேதப்படுத்துவார்கள்” என்பது நபிமொழி.

நூல் : புகாரி 5179

23.யூப்ரடீஸ் நதியில் தங்கப் புதையல்

யூப்ரடீஸ் (ஃபுராத்) நதி தங்கப் புதையலை வெளியே தள்ளும். அதைக்
காண்பவர்கள் அதிலிருந்து எதையும் எடுக்க வேண்டாம் என்பதும் நபிமொழி.

நூல் : புகாரி 7119

24.கஹ்தான் இன மன்னரின் ஆட்சி

(யமன் நாட்டு) கஹ்தான் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவர் தமது கைத்தடியால் மக்களை ஓட்டிச் செல்லும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பது நபிமொழி.

நூல் : புகாரி 3517, 7117

25.அல்ஜஹ்ஜாஹ் மன்னர்

ஜஹ்ஜாஹ் என்ற பெயருடைய ஒரு மன்னர் ஆட்சிக்கு வராமல் உலகம் அழியாது என்பது நபிமொழி.

நூல் : முஸ்லிம் 5183

26.எண்ணிப் பார்க்காது வாரி வழங்கும் மன்னர்

கடைசிக் காலத்தில் ஒரு கலீஃபா (ஆட்சியாளர்) தோன்றுவார். அவர் எண்ணிப் பார்க்காமல் செல்வத்தை வாரி வழங்குவார் என்பது நபிமொழி.

நூல் : முஸ்லிம் 5191

27.செல்வம் பெருகும்

செல்வம் பெருகும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பது நபிமொழி.

நூல் : புகாரி 1036, 1412, 7121

ஒருவர் தனது தர்மத்தை எடுத்துக் கொண்டு சென்று இன்னொருவருக்குக் கொடுப்பார். ‘நேற்று கொடுத்திருந்தால் நான் வாங்கியிருப்பேன்; இன்று எனக்குத் தேவையில்லை” என்று அந்த மனிதன் கூறிவிடுவான் என்பதும் நபிமொழி.

நூல் : புகாரி 1424

28.மாபெரும் யுத்தம்

இரண்டு மகத்தான சக்திகளுக்கிடையே யுத்தம் நடக்கும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது. அவர்களுக்கிடையே மகத்தான யுத்தம் நடக்கும். இருவரும் ஒரே வாதத்தையே எடுத்து வைப்பார்கள்.

நூல் : புகாரி 3609, 7121, 6936

29.பைத்துல் முகத்தஸ் வெற்றி

யுக முடிவு நாளுக்கு முன் ஆறு காரியங்களை எண்ணிக் கொள்!

1. எனது மரணம்

2. பைத்துல் முகத்தஸ் வெற்றி

3. கொத்து கொத்தாக மரணம்

4. நூறு தங்கக் காசுகள் ஒருவருக்குக் கொடுக்கப்பட்டாலும் அதில்
திருப்தியடையாத அளவுக்கு செல்வச் செழிப்பு

5. அரபுகளின் வீடுகள் முழுவதையும் ஆட்டிப் படைக்கும் குழப்பங்கள்

6. மஞ்சள் நிறத்தவர்(வெள்ளையர்)களுக்கும் உங்களுக்கும் நடக்கும் யுத்தம். அவர்கள் எண்பது அணிகளாக உங்களை நோக்கி வருவார்கள். ஒவ்வொரு அணிகளிலும் 12 ஆயிரம் பேர் இருப்பார்கள்.

நூல் : புகாரி 3176

30.மதீனா தூய்மையடைதல்

துருத்தி எவ்வாறு இரும்பின் துருவை நீக்குமோ அது போல் மதீனா நகரம்
தன்னிடம் உள்ள தீயவர்களை அப்புறப்படுத்தும் வரை யுக முடிவு நாள் வராது
என்பது நபிமொழி.

நூல் : முஸ்லிம் 2451

31.அன்றும் இன்றும் என்றும் நிகழ்ந்து கொண்டிருப்பவை

யுக முடிவு நாள் வரும் வரை முஸ்லிம்களில் ஒரு கூட்டம்
இம்மார்க்கத்திற்காக போராடிக் கொண்டே இருக்கும் என்பது நபிமொழி.

நூல் : முஸ்லிம் 3546

32.மாபெரும் பத்து அடையாளங்கள்

இவை தவிர மிக முக்கியமான அடையாளங்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்து விஷயங்களைக் குறிப்பிட்டார்கள்.

1 – புகை மூட்டம்

2 – தஜ்ஜால்

3 – (அதிசயப்) பிராணி

4 – சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது

5 – ஈஸா (அலை) இறங்கி வருவது

6 – யஃஜுஜ், மஃஜுஜ்

7 – கிழக்கே ஒரு பூகம்பம்

8 – மேற்கே ஒரு பூகம்பம்

9 – அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம்

10 – இறுதியாக ஏமனி’லிருந்து புறப்படும் தீப்பிளம்பு மக்களை விரட்டிச்
சென்று ஒன்று சேர்த்தல்

ஆகிய பத்து அடையாளங்களை நீங்கள் காணும் வரை அந்த நாள் வராது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி),

நூல்: முஸ்லிம் 5162.

புகை மூட்டம்

வானம் தெளிவான புகையை வெளிப்படுத்தக் கூடிய நாளை எதிர்பார்ப்பீராக! அப்புகை மனிதர்களைச் சூழ்ந்து கொள்ளும், இது கடுமையான வேதனையாகஅமைந்திருக்கும்.

(அல்குர்ஆன் 44:10,11)

உங்கள் இறைவன் உங்களுக்கு மூன்று விஷயங்களைப் பற்றி எச்சரிக்கிறான்.
அவற்றில் ஒன்று புகை மூட்டம். முஃமினை இப்புகை ஜலதோஷம் பிடிப்பது போல்பிடிக்கும். காஃபிரைப் பிடிக்கும் போது அவன் ஊதிப்போவான். அவனதுசெவிப்பறை வழியாகப் புகை வெளிப்படும். இரண்டாவது (அதிசயப்)பிராணி.மூன்றாவது தஜ்ஜால் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: அபூமாலிக்(ரலி)

நூல்: தப்ரானி

யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினரின் வருகை

இறுதியில் யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் திறந்து விடப்படுவார்கள். உடனே
அவர்கள் (வெள்ளம் போல் ஒவ்வொரு மேட்டிலிருந்தும்) விரைந்து வருவார்கள்.

(அல்குர்ஆன் 21:96)

ஈஸா(அலை) அவர்களின் வருகை

நிச்சயமாக அவர் (ஈஸா) இறுதிநாளின் அடையாளமாவார். இதில் அறவே சந்தேகம்
கொள்ளாதீர்கள்! என்னைப் பின்பற்றுங்கள். இதுதான் நேரான வழியாகும்.

(அல்குர்ஆன் 43:61)

மூன்று பூகம்பங்கள்

(மதீனாவின்) கிழக்கே ஒரு பூகம்பம். மேற்கே ஒரு பூகம்பம், அரபு
தீபகற்பத்தில் ஒரு பூகம்பம் ஆகிய மூன்று பூகம்பங்களை நீங்கள் காண்பது வரை
யுகமுடிவு நாள் ஏற்படாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹுதைபா(ரலி)

நூல்: முஸ்லிம்

பெரு நெருப்பு

எமனிலிருந்து நெருப்பு தோன்றி மக்களை அவர்களது மஹ்ஷரின்பால் விரட்டிச்செல்லும், அதுவரை கியாமத் நாள் ஏற்படாது என்று நபி(ஸல்) அவர்கள்கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹுதைபா(ரலி)

நூல்: முஸ்லிம்

நன்றி : ஹக்கீம்

ஞாயிறு, 10 அக்டோபர், 2010

குர்ஆனை அழிக்க முடியுமா?

இஸ்லாம் தோன்றியது முதல் இன்று வரை அதன் தூய கொள்கை களையும் வேத நெறிகளையும் தகர்க்க பல் வேறு சூழ்ச்சிகள் பல்வேறு கால கட்டங்களில் நடந்து வந்துள்ளன.

நபி பெருமானார் (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்திலும் அதற்குப் பின்னரும் அவர்களின் கொள்கைகளை எதிர்த்து அரசியல் ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் பல முயற்சிகளை பல் வேறு வடிவங்களில் மேற் கொண்டனர். அனைத்திலும் தோல்வியே கண்டனர்.

இருந்தும் இஸ்லாத்தை அழிக்க முடியவில்லையே, அது மிகவேக மாகப் பரவிக் கொண்டே செல்கிறதே என்ற ஆவேசம் தணியவே இல்லை.

இன்றும் கோடிக்கணக்கில் பணத்தை அள்ளி வீசி பல முனைத்தாக்குதல் களை தொடர்ந்த வண்ணமுள்ளனர்.

அல்குர்ஆனை அழிக்க பெரும் சதி!

முஸ்லிமகளை வழிநடத்தும் அருள்மறை அல்குர்ஆனை அழித்துவிட்டால் தீர்வு கிடைத்துவிடும் என்று பகற்கனவு கண்டு வருகின்றனர். அதற்காக,
‘ஷீஆயிஸம், காதியானியிஸம், சூபித்துவம், தரீக்காயிஸம்’ போன்ற பல இயக்கங்களை தோற்றுவித்தும் அது முடியாது போயிற்று.

பல இலட்சம் போலிக் குர்ஆன்கள்!

குர்ஆனில், யூதர்களின் கைவரிசைகளையும்;, அக்கிரமச் செயல்கைளயும் குறித்து வரும் வசனங்களை நீக்கிவிட்டு அவர்களுக்கு இசைவான வசனங்களை சேர்;த்து பல இலட்சம் பிரதிகளை அச்சடித்து ஆப்ரிக்க நாடுகளிலும், ஆசிய நாடுகளிலும், குறிப்பாக இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் வினியோகித்தனர்.கூலிப்படையினரின் சூழ்ச்சிகளில் அகப்பட்ட அப்பாவி மக்கள் பலியாகி செய்வறியாது திகைத்தனர்.

இந்தோனேசியாவில் ‘மேடான்’ என்ற நகரில் மட்டும் 25000 பிரதிகள் வினியோகிக்கப்பட்டன. இந்தத் தகவலை நேரிலே கண்டு நாம் கூறியதும், ‘பல நாடுகளில் விற்பனைக்காகவும், வினியோகத்திற்காகவும் வைத்திருந்த பிரதிகளை ‘ராபிதத்துல் ஆலமுல் இஸ்லாமியா’ என்ற உலக இஸ்லாமிய அமைப்பு அவற்றை வாங்கி தீ வைத்துக் கொளுத்தினர்;’.
அமெரிக்காவின் போலிக் குர்ஆன்

யூதர்களைத் தெடர்ந்து அமெரிக்காவின் சதிகள் தொடந்தன. இஸ்லாத்திற் கெதிராக பல்வேறு புத்தகங்களையும்,இணைய தளங்களையும் வெளியிட்டும் ஆத்திரம் அடங்கவில்லை. ஸல்மான் ருஷதி, தஸ்லீமா நஸ்ரீன் போன்ற போலி முஸ்லிம்களை வைத்துப் பல நூல்களையும் கதைகளையும் கற்பனையாக எழுதினர். எஃகு போன்ற உறுதிமிக்க கொள்கைப் பிடிப்புள்ள முஸ்லிம்களை எந்த வகையிலும் அவர்களால் அசைக்க முடியவில்லை.

நாடகம் தொடர்ந்தது! அவர்;களின் வேதங்களிலே விரும்பியவாறு எழுதி விளையாடியதுபோன்று குர்ஆனிலும் விளையாட மீண்டும் தொடங்கியுள்ளனர். பல யூத, கிறித்தவ அறிஞர்களின் ஆதரவோடும் ஆக்கங்களோடும் புதிய குர்ஆன் ஒன்றை அரங்கேற்றியுள்ளனர். இதோ ! படியுங்கள்.!

தலைப்பு : ‘ TruQuran ‘(உண்மைக் குர்ஆன்),

New American Quran (புதிய அமெரிக்கக் குர்ஆன், இந்த நூறறாண்டின் தலைசிறந்த குர்ஆன் என்ற விளம்பரங்களுடன் குவைத்தில் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு குர்அனை வெளியிட்டனர்.

ஆபத்தான விளைவை ஏற்படுத்தும் சூது நிறைந்த ஒரு புதிய குர்ஆனை அமெரிக்கர்கள் உருவாக்கி ‘தி ட்ரூ ஃபுர்கான்’ – உண்மையான குர்ஆன்- என்ற பெயரில் குவைத் பாடசாலைகளில் விநியோகம் செய்துள்ளனர். மேலும் ‘சாத்தானின் வசனங்கள்’ எனவும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.

இத்தகவலை ‘அல் புர்கான்’ வார இதழ் தெரிந்து அதை வெளியிட்டு இரு புத்தக வெளியீட்டாளர்களின் பெயர்களையும் அம்பலப்ப டுத்தியுள்ளது. இரு பெரும் நிறுவனங்களான’ஒமேகா-2001-ம்;,ஓய்ன் பதிப்பகமும்’ இணைந்து தான் இப்பெரும் கைங்கரியத்தை அரங்கேற்றியுள்ளது என்பதையும் வெளியிட்டுள்ளது.

அது மட்டுமல்ல ‘இது 21-வது நூற்றாண்டின் தலைசிறந்த குர்ஆன்’எனவும் முதல் பக்கத்திலேயே குறிப்பிட்டும் உள்ளனர்;.

366 பக்கங்களைக் கொண்ட இந்நூல் அரபி,ஆங்கிலம் ஆகிய இருமொழி களிலும் காணப்படுகிறது. இதனை குவைத் தனியார்; ஆங்கில பாடசாலை களில் வினியோகமும் செய்துள்ளனர்;.

இந்நூலில் 114 அத்தியாயங்க்குப் பதிலாக, 37 அத்தியாயங்களை தள்ளி விட்டு, 77 அத்தியாயங்களைத் தொகுத்துள்ளனர். அதில் அல்-பாத்திஹா அத்தியாத்தைத் தொடர்;ந்து அல்ஜனா, இஞ்சீல் என இருபுதிய அத்தியா யங்களையும் சேர்;த்துள்ளனர்.
அத்தியாயத்தின் காப்பு வாக்கியமான பிஸ்மில்லாஹ்வுக்குப் பதிலாக ஒவ்வொரு அத்தியாயத்தின் துவக்கத்திலும் முக்கடவுள் (வுசinவைல) கொள்கையைக் சித்தரிக்கும் ‘முக்கடவுள்களின் அருளால்’ என்ற நீண்ட வாக்கியத்தையும் குறிப்பிட்டுள்ளனர்;.

இந்த புதிய குர்ஆன் உலகின் எல்லா இஸ்லாமியர்களின் நம்பிக்கையைத் தகர்க்கும் வகையில் அவர்களின் உணர்வுளை சீண்டியுள்ளது.

அது மட்டுமல்ல, அதில்,

1. ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணப்பது கூடாது. (அதாவது பலதாரமணம் கூடாது)
2. விவாகரத்துக்கு அனுமதி கிடையாது.
3. நடைமுறையில் உள்ள சொத்துரிமை சட்டங்களை மாற்றி உயில் மூலம் விரும்பியவருக்கு சொத்துரிமை வழங்கலாம்.
4. இஸ்லாத்தில் ஜிஹாத்- மார்க்கப்போர் ‘ஹராம்’ தடைசெய்யப் பட்டுள்ளது.
மேலும், அல்லாஹ்வின் வல்லமையை விமர்சனமும் செய்து பல நச்சுக் கருத்துக்களையும் திணித்து ‘மூன்று டாலர் விலைதான்’ என மலிவு விலையிலும் வெளியிட்டுள்ளது.

அல்லாஹ்வின் பாதுகாப்பு

கோடிக்கணக்கில் செலவு செய்து எப்படிப்பட்ட சூழ்ச்சிகளை உலகளாவிய அளவில் செய்தாலும் அல்லாஹ்வின் அருள்மறை குர்ஆனை அணைத்துவிட முடியாது! அழித்துவிட முடியாது! ‘அதை நாம் பாதுகாத்தே தீருவோம்’ என்ற உத்தரவாதத்தை அதை அருளிய நாயனே நமக்குத் தந்துள்ளான்.

இதோ அந்த உத்தரவாதம்
உலகப்பொது மறையை வழங்கிய வல்ல நாயன் அல்லாஹ் கூறுவதைக் கேளுங்கள்.

إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ

நிச்சயமாக நாமே இந்த குர்ஆனை அருளினோம்! மேலும் நாமே இதை பாதுகாப்போம். (அல்ஹுஜர் 15:09)

يُرِيدُونَ لِيُطْفِؤُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَاللَّهُ مُتِمُّ نُورِهِ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ

நிச்சயமாக அல்லாஹ்வின் வேதத்தின் ஒளியை தங்களின் வாய்களால் ஊதிஅணைக்க நினைக்கின்றனர். மேலும் நிராகரிப்பவர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் அதை (அணைக்கவிடாமல்) பூரணமாக்கவே விரும்புகிறான். (அஸ்ஸஃப்- 61:08, அத்தவ்பா- 9:32)

குர்ஆனை கிழித்தெறிந்த பிரிட்டிஷ் பிரதமர்

குர்ஆனுடைய குடியிருப்பு மனித உள்ளங்கள் ஆகும் எழுதப்பட்ட நூலுக்குள் அல்ல. இதை நமது எதிரிகள் யாவரும் புரிந்து வைத்துள்ளனர்.

குர்ஆனிய சமுதாயமாகிய நாம் குர்ஆனை மனனம் செய்து அதை ஓதியும், ஆய்வு செய்தும் அதனடிப்படையில் வாழ்க்கையை அமைத்துக் கொள்பவர்கள் முஸ்லிம்கள்.

ஆகவே, குர்ஆனிய சமுதாயத்தை எந்த காரணத்தை முன்னிட்டும் எந்த சக்தியும் வெற்றி கொள்ள முடியாது .
குர்ஆன் பெரும்பான்மையான முஸ்லீம்களுடைய மனங்களில் வாழ்ந்த போது முழு உலகையும் தமது காலடியில் கொண்டு வந்த ரோமானியர்களால் கூட வெல்ல முடியாமல் திணறினார்கள் இறுதியில் ரோமானிய சாம்ராஜ்யத்தையும் சின்னஞ் சிறுக் கூட்டத்தினரிடம் தாரை வார்த்தார்கள். அதற்கடுத்த ஆங்கிலேயர் நாடு பிடிக்கும் ஏகாதிபத்திய வெறியில் ஈடுபட்டிருந்த போது பெரும்பாலான முஸ்லிம் நாடுகள் அவர்களுடைய பிடியில் சிக்கவில்லை.
அதனுடைய காரணத்தைக கண்டறிந்த அன்றைய பிரிட்டிஷ் பிரதமர் கிலாடுஸ்டோன் (Glad stone) பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் ஒரு கையில் குர்ஆனை ஏந்தியவாறு அதனுடைய சில பக்கங்களைக் கிழித்தவாறு கீழ்வருமாறு கர்ஜித்தான்.
குர்ஆனுடைய சில பக்கங்களைக் கிழித்து விடுவதால் மட்டும் முஸ்லிம்களை வெற்றி கொண்டு விட முடியும் என்று நான் கூற மாட்டேன். மாறாக முஸலீம்களுடைய உள்ளங்களில் மனனமாகி இருக்கும் குர்ஆனை மறக்கடிக்காதவரை அவர்களை வெற்றிக் கொள்ள முடியாது என்று கொக்கரித்தான்.

முஸலிம்களே!
குர்ஆனை மனனம் செய்யுங்கள் உள்ளத்தில் பதிய வையுங்கள், மனித வாழ்வின் ஒப்பற்ற நெறிகளை போதிக்கும் , குர்ஆன் நமது உள்ளத்தில் இருக்கும் வரை எவரும் நம்மை அழிக்கமுடியாது. மாட்டார்.

கிறித்தவ தேவாலயம் குர்ஆனை எரிக்க அறிவிப்பு

புனிதக் குர்ஆனை எரித்து இஸ்லாமியச் சகோதரர்களின் மனக் கடலைக் கொந்தளிக்கச் செய்து காயப் படுத்தும் அமெரிக்க மூர்க்கர்களின் அடங்கா வெறியையும் அவர்களின் குர்ஆன் எதிர்ப்பு அறிவிப்பையும் கண்டு உலகே கொதிந்து எழுந்தது. இதையறிந்த கிறித்தவ உலகம் ஆடிப்பேயிற்று.

ஒரு முட்டாள் பாதிரியாரின் அறிவிப்பால் உலக அமைதிக்கு மீண்டும் ஓர் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருக்கிறது.

சக மனிதனை பார்த்து புன்னகைப்பதும், மக்கள் நடமாடும் இடத்தில் கிடக்கும் தீங்கு விளைவிக்கும் ஆணி, இரும்பு போன்ற பொருள்களை நீக்குவதும் தர்மம் என போதிக்கும் இஸ்லாத்தை “சாத்தான் மதம்” என்று சொன்னதோடு மட்டுமன்றி, அமெரிக்க ப்ளோரிடா மாநிலத்தைச் சார்ந்த பாஸ்டர் டெர்ரி ஜோன்ஸ் இந்த ஆண்டு செப்டம்பர் பதினோராம் தேதி குர்ஆன் எரிப்பு தினமாக அறிவித்தார்.

இந்த அறிவிப்பினால் அமெரிக்கா மிகுந்த பயத்திற்கு உள்ளாகி உள்ளது. மேலும் இதுவரை அமெரிக்கா கடைபிடிக்க நினைக்கும் முஸ்லிம்கள் நல்லெண்ண நடவடிக்கைகள் அணித்தும் இந்த ஒரு நிகழ்ச்சியால் அடிபட்டு போகும் என்றும் உணர்ந்தனர். இதற்கு ஹிலாரி கிளிண்டன் உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆப்கானிலும் , ஈராக்கில் மீதும் இருக்கும் அமெரிக்க படையினர் பற்றி கவலை தெரிவித்து உள்ளார் அமெரிக்க பொறுப்பு கலோனல் .

வாடிகன் போப் ஆலயமும் இதை காட்டு மிராண்டி தனம் என்று அறிவித்து உள்ளதோடு இதை கைவிட கோரி உள்ளது. ஆனால் இதற்கான எல்லா ஏற்பாடுகளையும் நிறுத்தாமல் செய்வதாக அந்த தேவாலைய தகவல்கள் தெரிவித்தன.

இதற்கிடையே ஃபுளோரிடா தேவாலயத்தின் இந்த குரான் எரிப்பு நிகழ்ச்சிக்கு அமெரிக்காவிலுள்ள கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய குழுக்கள் பல கண்டனம் தெரிவித்தன. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ‘த நேஷனல் அசோசியேசன் ஆப் எவான்ஜெலிக்கல்ஸ் (NAE)’ என்ற கிறிஸ்தவ அமைப்பு> குரான் எரிப்பு நிகழ்ச்சியை ஃபுளோரிடா தேவாலயம் கைவிட வேண்டும் என்றும்> இது உலக அளவில் இரு பிரிவு மதத்தினருக்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்திவிடும் என்றும் எச்சரித்தது.

இந்த நிகழ்ச்சி நடந்தால் உலக முஸ்லிம்களின் கொந்தளிப்பும் மீண்டும் செப்டம்பர் பதினொன்று போன்ற தீவிரவாத சம்பவங் களுக்கும் காரணமாக அமைந்துவிடும்.

உலக அமைதியை குலைக்க நினைக்கும் இது போன்ற விசயங்களில் இருந்து உலகைகாக்க அமைதியும் மனிதர்களிடையே மனித நேயமும் சக மனிதனையும் அவன் உணர்வுகளை மதிக்கும் எண்ணங்களை உயர்த்திடவேண்டும் அனைவரும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்தனர்.

இருந்தும் செப்டம்பர் 11 ஆம் தேதி டென்மார்க்கில் குர்ஆன் எரிப்பு நிகழ்ச்சியும், காலணிகளால் மிதித்து அடித்து அதன் மீது செருப்புக்கால்களால் ஏறிநின்றும் அசிங்கங்களை வீசியும் தங்கள் எதிர்ப்பைக் காட்டியுள்ளனர்.அதோடு நின்று விடாமல் குர்ஆனை கிழித்து தீவைத்துக் கொளுத்தியும் குர்ஆன் வெறியை வெளிப்படுத்தினர்.

முஸ்லிம்களே! விழித்தெழுங்கள்!

இன்னுமா தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள் ? நமது இறையருள் வேதமாம் உலகப்பொதுமறை அல்குர்ஆனின் மாண்பினைப் புரியாது அதை துணியில் சுற்றி ஏதோ வீட்டு மாடத்திலும், கைக்கெட்டா விட்டத்திலும் தூக்கி வீசியதன் விளைவு தான் இன்று நமது எதிரிகள் நம் குர்ஆனோடு விளையாடத் துவங்கியுள்ளனர்.

முதலில்
குர்ஆனின் முக்கியத்துவத்தை இன்னும் நாம் புரிந்து கொள்ள வில்லை. புரிந்து கொண்டால் அதில் அல்லாஹ் விவரிக்கும் உலகத்தின் வரலாறு உலக அதிசயங்கள், அறிவியல் உண்மைகள், வாழ்கை நெறிகள்,சட்ட திட்டங்கள் போன்ற அனைத்தையும் அதில் காணலாம்.

இறைவன் கூறுவதைக் கேளுங்கள்!

1.

إِنْ هُوَ إِلاَّ ذِكْرَى لِلْعَالَمِينَ

إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ لِّلْعَالَمِينَ

إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ لِّلْعَالَمِينَ

نْ هُوَ إِلَّا ذِكْرٌ لِّلْعَالَمِينَ

அல்அன்ஆமில் 6:90, யூசுப் 12:104, ஸாத் 38:87, அத்தக்வீர் 81:27 -ல் 4 வசனங்கள்! நான்கு தடவைகள் ஓங்கி முழங்குகிறான்
1.இது உலகத்தார் அனைவருக்கும் ஒரு நல்லுபதேசமாகும் என்று மீண்டும் மீண்டும் கூறி, ‘ இது ஓர் உலகப் பொது மறை’ என்று அறிவிக்கிறான்.

2.

مَّافَرَّطْنَا فِي الكِتَابِ مِن شَيْءٍ }الأنعام

நாம் (இவ்) வேத நூலில் எப்பொருளையும் எடுத்துரைக்காது விட்டு வைக்கவில்லை.
(அல்அன்ஆம் 6:38) என்ற வசனத்தின் மூலம் ‘இது மனித சமுதாயத்திற்கு தேவையான அனைத்தையும் கூறும் அருள் மறை’ என்று கூறுகிறான். அது மட்டுமா ?
3.

وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَاناً لِّكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ

நாம் உங்களுக்கு ஒவ்வொரு விசயத்தையும் தெளிவாக விளக்கக் கூடிய இவ்வேதத்தை நாமே அருளினோம் (16:89) என்று கூறி ‘அனைத்தையும் தெளிவாகவும் விரிவாகவும் விளக்கும் வேத நூல்’ என்றும் உலகுக்கு உணர்த்துகிறான்.

அதில் என்னதான் இல்லை ? உலகமே அதிசயிக்கும் அனைத்தும அதில் உள்ளன.

குர்ஆனைப் படியுங்கள்! ஆய்வு செய்யுங்கள்.வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துங்கள்.

குர்ஆனைப்பின்பற்றும் காலமெல்லாம் முஸ்லிம்களை எவரும் எந்தக் காலத்திலும் அழிக்க முடியாது

சனி, 18 செப்டம்பர், 2010

அல்லாஹ்வின் மீது நம்பிக்கை

அடிப்படை விளக்கம்

அல்லாஹ்வை ஈமான் கொள்ள வேண்டும் என்பதின் விளக்கம் என்னவென்றால் அல்லாஹ் தன்னைக் குறித்து அல்குர்ஆனில் கூறியிருக்கும் தன்மைகள் (ஸிஃபத்துகள்) செயல்கள் அனைத்தும் உண்மையே என நம்புவதாகும். அந்தத் தன்மைகளையும் செயல்களையும் கொண்டுதான் அல்லஹ்வை நம்பிக்கை கொள்ள வேண்டும். அத்துடன் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப்பற்றி கூறியுள்ள தன்மைகளையும், செயல்களையும் நம்பிக்கை கொள்ள வேண்டும்.

அல்குர்ஆனிலும் ஆதாரமிக்க நபிமொழிகளிலும் கூறப்பட்டுள்ளதில் நமது அறிவைக் கொண்டு கருத்து, பொருள் மாற்றத்தையோ செய்யக்கூடாது.

அவனுடைய தன்மைகளுக்கும் செயல்களுக்கும் படைப்பினங்களின் தன்மைகளையும் செயல்களையும் உதாரணமாக உவமையாக கூறக்கூடாது.

படைப்பினங்களின் தன்மைகளைக் கொண்டும் செயல்களைக் கொண்டும் அல்லாஹ்வின் தன்மைகளையும் செயல்களையும் விவரிக்கக் கூடாது.

அல்லாஹ்வின் தன்மைகள், செயல்கள் பற்றி கூறப்பட்டுள்ள குர்ஆனின் வசனங்களை பொருளற்றவை என்று கூறக்கூடாது.

அல்லாஹ் தன்னைப்பற்றி அல்குர்ஆனில் கூறியிருக்கும் வசனத்திற்கேற்ப அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ள வேண்டும்.

لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ وَهُوَ السَّمِيعُ الْبَصِيرُ

..... அவனுக்கு ஒப்பானது ஒன்றுமில்லை அவன் (யாவற்றையும்) செவியுறுபவனாகவும்) உற்று நோகியவனாகவும் இருக்கிறான். (ஸுரா அஷ்ஷுறா 42:11)

இதன் அடிப்படையில் அல்லாஹ் தன்னைப் பற்றி கூறியிருக்கும் எந்த தன்மைகளையும் அவை அவனுக்கு இல்லை என்று மறுக்கக் கூடாது. அல்லாஹ்வின் வசனங்களை மாற்றக் கூடாது. அவைகளை புரட்டி, திருத்தி மாற்றுப் பொருள் கூறவும் கூடாது. அல்லாஹ்வின் வசனங்களிலும் அவனது அழகிய திருப்பெயர்களிலும் முரண்பட்ட பொருளை புகுத்தக்கூடாது. எந்நிலையிலும் அல்லாஹ்வின் தன்மைகளுக்கு படைப்பினங்களின் தன்மைகளை உவமையாக கூறக் கூடாது.

நிச்சயமாக அல்லாஹ்விற்கு நிகரானவர் எவரும் இல்லை. அவனுக்கு சமமானவரும் எவரும் இல்லை. அவனுடைய தன்மையைப் பெற்றவரும் எவருமில்லை. அல்லாஹ்வை அவனது படைப்பினங்களைக் கொண்டு கணித்துவிடக் கூடாது. கணித்துவிடவும் முடியாது. அல்லாஹ் தன்னைப் பற்றியும் பிறரைப் பற்றியும் மிக அறிந்தவன். அவன்தான் முற்றிலும் உண்மையை உரைப்பவன். அவனது படைப்பினங்கள் அனைத்தையும் விட அவன்தான் மிக அழகிய முறையில் பேசுபவன். ஆகவே அவன் தன்னைப் பற்றி கூறியிருக்கும் அனைத்தும் சரியானைவையும், உண்மையானவையுமாகும். அவன் தன்னைப் பற்றி கூறியிருக்கும் தன்மைகளுடன்தான் நாம் அவனை ஈமான் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக அவனது தூதர்கள் அனைவரையும் உண்மையாளர்கள் என்றும் அல்லாஹ்வால் மெய்ப்பிக்கப்பட்டவர்கள் என்றும் நம்பிக்கைக் கொள்ளவேண்டும். ஆகவே இறைத்தூதர்கள் அல்லாஹ்வைப் பற்றி கூறியுள்ள அழகிய தன்மைகள் அனைத்தும் அவனுக்கு உரியனவே என ஈமான் கொள்ள வேண்டும். அல்லாஹ்வைப் பற்றி உறுதியான ஆதாரமும், தெளிவான அறிவுமின்றி பேசுபவர்களின் வழிமுறையை நாம் பின்பற்றக் கூடாது. இதைப் பற்றி அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:

وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ

அவர்கள் வர்ணிப்பதை விட்டும், கண்ணியத்தின் இறைவனான உம்முடைய இறைவன் தூயவன்.மேலும் முர்ஸல்(களான அவன் தூதர்)கள் மீது ஸலாம் உண்டாவதாக. இன்னும் புகழ் அனைத்தும் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தாகும்.

இவ்வசனங்களிலிருந்து நாம் விளங்க வேண்டியவை என்னவெனில்:
1. இறைத்தூதர்களுக்கு முரண்பட்டு அல்லாஹுவை பற்றி வர்ணிப்பவர்களின் வர்ணணைகளை விட்டும் அல்லாஹ் மிகத் தூய்மையானவன்.

2. இறைத்தூதர்கள் அல்லாஹுவை பற்றி கூறுவது அனைத்தும் எல்லாக் குறைகளை விட்டும் தவறுகளை விட்டும் பாதுகாக்கப்பட்டது. எனவேதான் அவர்களுக்கு அவனது அருளும் பாதுகாப்பும் உண்டு என வாக்களிக்கின்றான்.

3. அல்லாஹ் அவனுக்கு வைத்துக் கொண்ட பெயர்களிலும், அவன் வர்ணிக்கும் அவனது அழகிய பண்புகளிலும் அவன் கூறும் முறை என்னவெனில், அவன் தனக்கு தகுதியற்றதை தன்னிடம் இல்லையென்றும், தனக்கு தகுதியானதை தனக்கு இருக்கின்றது என்றும் கூறுகின்றான்.

எனவே, நபிவழியையும் நபித்தோழர்களையும் பின்பற்றும் நன்மக்கள் எந்நிலையிலும் அல்லாஹ்வின் தூதர்கள் கற்றுக் கொடுத்த இறைக் கொள்கையிலிருந்தும், ஈமானிய வழியிலிருந்தும் திரும்பிடக் கூடாது. நிச்சயமாக இதுவே மிக நேரான வழியாகும். இது அல்லாஹ் அருள்புரிந்த நபிமார்கள் .இறைத்தூதர்கள், "ஸித்தீக்' என்ற உண்மையாளர்கள், "ஷஹீத்' என்ற இறை பாதையில் உயிர்நீத்த தியாகிகள், "ஸôலிஹ்' என்ற நல்லோர்கள் ஆகியோரின் வழியாகும்.

அல்லாஹ் தன்னைப்பற்றி வர்ணித்துள்ள வசனங்களில் மிக முக்கியத்துவம் வாய்ந்த, திருக்குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதிக்கு சமமானது என்று கூறப்பட்ட சூரத்துல் இக்லாஸ் இக்கருத்தைத்தான் உறுதிப்படுத்துகிறது.

قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُلَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ

(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் (எவருடைய) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை.அன்றியும், அவனுக்கு நிகராகவும் ஒன்றுமில்லை. (ஸூரா அல்இக்லாஸ் 112:1-4)

மேற்கூறப்பட்ட திருவனங்களிலிருந்து நாம் விளங்கிக் கொள்ள வேண்டியவைகள்:

1) அல்லாஹ் என்ற வார்த்தை அகிலத்தைப் படைத்து பரிபாலித்து இரட்சித்து வரும் ஏக இறைவனுக்குரிய பெயராகும். இது "இலாஹ்' என்ற பதத்திலிருந்து வந்ததாகும். இதன் பொருள் "உண்மையில் வணக்கத்திற்கு தகுதியானவன்' என்பதாகும்.

2) அல்லாஹ் ஏகனே. அவனது உள்ளமை, அவனது பெயர்கள், அவனது தன்மைகள், அவனது செயல்கள் அனைத்திலும் அவனுக்கு இரண்டாமவர் இல்லை, அவனுக்கு நிகரானவர் இல்லை, அவனுக்கு ஒப்பானவர் இல்லை.

3) அஸ்ஸமது (தேவையற்றவன்) என்ற வார்த்தையின் பொருளாவது "தனது ஆட்சி, அறிவு, கண்ணியம், சிறப்பு அனைத்திலும் அவன் பூரணமானவன். அவன் யாருடைய தேவையுமற்றவன், அவனைத் தவிர யாவரும் அவன்பால் தேவையுடையவர்களே.

4) அவன் யாரையும் பெற்றெடுக்கவில்லை. அதாவது அவன் யாருடைய தகப்பனுமல்ல. அவன் எவருக்கும் பிறந்தவனுமல்ல. அதாவது அவன் எவரின் பிள்ளையுமல்ல. அவன் முற்றிலும் படைப்பினங்களுக்கு அப்பாற்பட்டவன். அவனே முந்தியவனும் முதலாமவனுமாவான். படைப்பினங்களை விட்டும் படைப்பினங்களின் தன்மையை விட்டும் முற்றிலும் தூய்மையானவன்.

5) ஆகவே, அவனுக்கு நிகராக எவருமில்லை. அவனைத் தவிர அனைத்தும் அவனால் படைக்கப்பட்டவையே. அந்த படைப்பினங்களில் எதுவும் அவனுக்கு சமமாகவோ நிகராகவோ ஒப்பானதாகவோ இல்லவே இல்லை. அல்லாஹ்தான் பூரணமானவன்.

இவ்வாறே திருக்குர்ஆனின் மிக மகத்தான வசனம் என்று வர்ணிக்கப்பட்ட "ஆயத்துல் குர்ஸி' என்ற பின்வரும் வசனமும் இக்கருத்தை உறுதிப்படுத்துகிறது.

ٱللَّهُ لَآ إِلَـٰهَ إِلَّا هُوَ ٱلۡحَىُّ ٱلۡقَيُّومُ‌ۚ لَا تَأۡخُذُهُ ۥ سِنَةٌ۬ وَلَا نَوۡمٌ۬‌ۚ لَّهُ ۥ مَا فِى ٱلسَّمَـٰوَٲتِ وَمَا فِى ٱلۡأَرۡضِ‌ۗ مَن ذَا ٱلَّذِى يَشۡفَعُ عِندَهُ ۥۤ إِلَّا بِإِذۡنِهِۦ‌ۚ يَعۡلَمُ مَا بَيۡنَ أَيۡدِيهِمۡ وَمَا خَلۡفَهُمۡ‌ۖ وَلَا يُحِيطُونَ بِشَىۡءٍ۬ مِّنۡ عِلۡمِهِۦۤ إِلَّا بِمَا شَآءَ‌ۚ وَسِعَ كُرۡسِيُّهُ ٱلسَّمَـٰوَٲتِ وَٱلۡأَرۡضَ‌ۖ وَلَا يَـُٔودُهُ ۥ حِفۡظُهُمَا‌ۚ وَهُوَ ٱلۡعَلِىُّ ٱلۡعَظِيمُ

அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை. அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன், என்றென்றும் நிலைத்திருப்பவன்;, அவனை அரி துயிலே, உறக்கமோ பீடிக்காது, வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன, அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்;. அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது. அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது. அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை - அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன்.

மேற்கூறப்பட்ட திருவசனத்திலிருந்து நாம் விளங்கிக் கொள்ள வேண்டியவை:

1) அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் வணக்கத்திற்குரியவன் இல்லை. எனவே அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் வணங்கக்கூடாது. அல்லாஹ்விற்கு செய்யும் வணக்க வழிபாடுகளை அவனைத் தவிர வேறு யாருக்கும் செய்யக்கூடாது.

2) அவனே என்றென்றும் உயிருள்ளவன்; நிலையானவன். அவனைத் தவிர இவ்வுலகத்தில் உள்ள அனைத்து வஸ்துக்களும் அழியக்கூடியவையே ஆகும். அவனுக்கு மரணமுமில்லை, சிறு தூக்கமுமில்லை. அவன் எந்நேரமும் படைப்பினங்கள் அனைத்தையும் கண்காணித்தவனாகவே இருக்கின்றான். வானங்களில் உள்ளவையும் பூமியிலுள்ளவையும் அவனுக்கே சொந்தமானவை. ஏனெனில் அவனே அவைகளை படைத்தான். அவைகளை படைக்கும் விஷயத்தில் அவனுக்கு வேறு எந்த உதவியாளரும் இல்லை. அவ்வாறே படைப்பினங்களை நிர்வகிப்பதிலும் அவனே முழு அதிகாரம் பெற்றவன்.

3) அவன் அனுமதி கொடுக்காமல் எவரும் எவருக்கும் சிபாரிசு செய்ய முடியாது. படைப்பினங்கள் எவ்வளவுதான் அந்தஸ்தில் உயர்ந்தாலும் அவைகள் அல்லாஹ்வின் அடிமைகளே. அல்லாஹ்வே அனைத்தையும் அடக்கி ஆளும் அகிலங்களின் அனைத்தின் அரசனாக இருக்கின்றான். அவனிடம் எவரும் துணிவு கொள்ளவோ அதிகாரம் செலுத்தவோ அவனை நிர்பந்திக்கவோ முடியாது. எவரும் அல்லாஹ்விடத்தில் தனக்குரிய அந்தஸ்தைக் கொண்டு தான் விரும்பியவர்களுக்கெல்லாம் அவனிடம் பரிந்துரை செய்யலாம் என்று துணிந்துவிட முடியாது. மாறாக, பரிந்துரை செய்வதற்கும், யாருக்காக பரிந்துரை செய்யலாம் என்றும் அல்லாஹ் அனுமதி வளங்க வேண்டும். அப்போதுதான் பரிந்துரையையும் அவன் ஏற்றுக் கொள்வான்.

4) அல்லாஹ்வின் அறிவே முழுமையானது. அல்லாஹ் எதையும் அவன் நாடிய அளவே படைப்பினங்கள் அறிந்து கொள்ள முடியும். படைப்பினங்களின் அறிவு முழுமையானதல்ல!.

5) அவன் தன் படைப்பினங்களை விட்டும் உயர்ந்தவன், மகத்தானவன். ஏழு வானங்களுக்கு மேல் அவன் அமைத்திருக்கும் "குர்ஸி" ஏழு வானங்களை விடவும் ஏழு பூமிகளை விடவும் மிக விசாலமானது என்று அவன் கூறியதிலிருந்து அவனது மகத்தான ஆற்றலையும் மாபெரும் வல்லமையையும் விளங்கிக் கொள்ளலாம்.

6) வானங்கள் பூமிகளை படைத்தது அவனுக்கு இலகுவானதே. அதில் எவ்வித சிரமமோ அவனுக்கு இல்லை. அவ்வாறே அதில் கோடானக் கோடி படைப்பினங்களை படைத்ததும் அவனுக்கு சிரமமானதல்ல. வானங்களையும் பூமிகளையும் அதிலுள்ள அனைத்து படைப்பினங்களையும் பாதுகாப்பதும் இரட்சிப்பதும் நிர்வகிப்பதும் அவனுக்கு மிக இலகுவானதே. அவன் அத்தகைய மாபெரும் ஆற்றலும் சக்தியும் படைத்தவன்.

"குர்ஸி என்பது அல்லாஹ்வுடைய பாதத்தின் ஸ்தலமாகும்'' என்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது. (முஸ்தத்ரகுல் ஹாகிம், முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா, தாரகுத்னி, முஃஜமுத் தப்ரானி, ஸஹீஹ் இப்னு குஜைமா.)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் ஒருவர் இரவில் இவ்வசனத்தை ஓதுகிறாரோ அவருக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஒரு பாதுகாவலர் இருப்பார். காலை வரை ஷைத்தான் அவரை அணுகமாட்டான். (ஸஹீஹுல் புகாரி)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் ஒருவர் ஒவ்வொரு பர்ளான தொழுகைக்குப் பின்பும் ஆயத்துல் குர்ஸியை ஓதுவாரோ அவர் சுவனம் நுழைய மரணத்தைத் தவிர வேறெந்த தடையும் இல்லை. (ஸூனனுன் நஸôயீ, அஸ்ஸில்ஸலத்துல் ஸஸீஹா)

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை பற்றி வர்ணித்து இருக்கும் அனைத்து தன்மைகளையும் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்கள் திருக்குர்ஆனின் விளக்கவுரை களாகும். ஆகவே நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிஞர்களால் ஏற்று கொள்ளப்பட்ட உறுதிமிக்க, சரியான (ஸஹீஹ்) ஹதீஸ்களில் வந்துள்ள அல்லாஹ்வின் தன்மைகள், செயல்கள், பண்புகள் அனைத்தும் அவனுக்கு உண்டு என நாம் ஈமான் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வின் தூதருக்கு கட்டுப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் வசனங்கள் குர்ஆனில் ஏராளம் உள்ளன. பார்க்க 4:13, 4:80, 4:59, 33:36.